search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா நதி"

    தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கடந்த ஜனவரி மாதம் அமராவதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்கரி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது, ‘ஆண்டுதோறும் கோதாவரி நதியில் இருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கெல்லாம் கோதாவரி- கிருஷ்ணா-பென்னார்- காவிரி நதிகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி செலவாகும். இதற்காக உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதி பெற திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 4 தென்மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்’ என்று கூறியிருந்தார்.

    காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கை விடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின்கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தனது டுவிட்டர் பக்கத்தில், இது தான் பா.ஜ.க. என்றும், நீங்கள்(தமிழக மக்கள்) நிராகரித்தாலும் பா.ஜ.க. தனது கடமையை செய்யும் என்றும் கூறி உள்ளது.



    மேலும், நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘நன்றி சார்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோன்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மத்திய மந்திரி நிதின்கட்கரியின் பேட்டியை பார்த்தேன். நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு நிதின்கட்கரி அளித்த பதில் எனது கண்களில் இருந்து கண்ணீரை பெருக்கெடுக்க செய்தது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் உங்களது பொதுவான திட்டம் என்ன என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு நிதின்கட்கரி, முதல்முறை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் இருந்த போது ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினேன். 2-வது முறை பொறுப்பேற்கும்போது நீர் வழி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவோம். தமிழகம் தொடர்ந்து தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் வகையில் கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது கடமையும், முதல் வேலையும் ஆகும் என்று பதில் அளித்தார்.

    என்ன அற்புதமான மனிதர் இவர். பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் வாக்களித்த போதும் தமிழ்நாட்டின் மேம்பாட்டை தான் முதல் திட்டமாக வைத்திருக்கிறார். இந்த கட்சியைத் தான் தமிழ்நாடு அங்கீகரிக்க தவறிவிட்டது’ என்று கூறி உள்ளார்.
    பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி. ஏரிக்கு கடந்த 29-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 706 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடும் மதகுகளை பார்வையிட்டார். பின்னர் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் வந்து சேரும் பகுதிக்கு சென்றார்.

    அப்போது கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    தாமரைகுப்பம் ‘ஜீரோ’ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் பொது மக்கள் யாரும் குளிக்காமலும், துணி துவைக்காமலும் தடுக்க அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    மேலும் கால்வாய் நெடுகிலும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறி கால்வாயில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி கூறினார்.

    பின்னர் அவர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் பேபி கால்வாய், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சந்திரகுமார் உடன் இருந்தனர். #tamilnews
    ×